2 thoughts on “உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்..”
அருகிலேயே அமர்ந்து சொல்லித்தருவது போல இருந்தது.கணினியின் மின்ம பொருட்களை (hardware)பற்றியும் விளக்கியமை தெளிவைத் தந்தது.குறைந்த இணைய வேகம் உடையவன் என்பதாலும், மின்தடை அடிக்கடி நிகழ்ந்ததாலும் 10-12மணிநேரம் பதிவிறக்கம் ஆனது.ஒருவழியாக (in dual boot mode) நிறுவினேன்.தெள்ளிய தமிழ் ஒலிப்புடன் உங்கள் குரல் இருந்தது இன்னும் சிறப்பு.இன்னும் கொஞ்சம் ஆங்கிலச்சொல்லாடலைத் தவிர்க்கவும்.இந்நிகழ்படத்தை பதிவிறக்க, இங்கே வசதி செய்தால் நன்றாக இருக்கும்.இணையவேகம் ஒரு சில நேரங்களில் மட்டுமே பல தமிழக இடங்களில் சிறப்பாக இருக்கும். நான் வியந்தது என்னவென்றால், இயக்குதளம்(OS) நிறுவப்பட்டிருக்கும்போதே இணைய உலாவல் நிகழ்ந்தது.பொதுவாக, இயக்குதளம் நிறுவி முடித்த பின்பு தானே, இணைய உலாவல் செய்யமுடியும்.நானும் இதுபோல, தமிழ் உபுண்டு இணையக்கல்வி வளர, நிகழ்படம் உருவாக்க என்ன செய்யவேண்டும். வழிகாட்டுக. மிக்க நன்றி. வணக்கம்.

தகவலுழவன்,
ஆங்கிலத்தை தவிர்ப்பது சாத்தியமே. ஆயினும் வேண்டியே அப்படி செய்திருந்தேன்.
முழு வீடியோவையும் http://blip.tv/file/get/Yavarkkum-1204172.webm முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களுக்கு செய்து காட்ட விர்சுவல் மெஷினில் நிறுவினேன். உபுண்டுக்குள் உபுண்டு.
eidete என்ற கருவி கொண்டு செய்திருக்கிறோம். அதுபற்றியும் ஏனைய விஷயங்கள் பற்றியும் கண்டிப்பாக வரக்கூடிய வீடியோக்களில் தர திட்டமிடுகிறோம்.