செயற்திட்டம்…

உபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள்.

இதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் நாம் வைத்ததில்லை. இனி அவ்வாறு அல்லாது இணைவோர் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாயிலாக என்ன மேற்கொள்ள விழைகின்றனர் என்பதை விவரிக்க வேண்டும். பிற்பாடு மாதாந்திர ஐ ஆர் சி உரையாடலில் கலந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள விழையும் வழிமுறைகளை மற்றோருக்கு அறியத் தர வேண்டும். தொடர்ச்சியான சிறிய அளவிலான பங்களிப்பேனும் தருவது நல்லது. இப்போதைக்கு இருப்போரது நிலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

மொழிபெயர்ப்பு – ஆவணமாக்கம் போன்றவை முக்கியம். இதெற்கென ஒரு குழு வேண்டும்.

இவற்றைத் தாண்டி – வீடியோ ஆடியோ டுடோரியல்கள் செய்ய வேண்டும். – இதெற்கெனவும் குழு வேண்டும்.

நம்மில் சிலர் உபுண்டு உருவாக்குநர் ஆக முன்வர வேண்டும். உபுண்டு உருவாக்குநர் ஆகிக் காட்டுவதோடு அடுத்த எல் டி எஸ் வரும் போது தமிழ் வழியில் பயின்று உபுண்டு உருவாக்குநர் ஆன இரண்டு மூன்று பேரையாவது நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். இதற்கு வேண்டியனவற்றை கொணர யாவர்க்குமான அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்னென்ன பயன்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை பட்டியலிட்டு அவற்றை உருவாக்க செயற்திட்டம் வகுத்து செய்ய வேண்டும். அவை உருவாக்கப்பட்டு உபுண்டு ரெபாசிட்டரியில் இடம்பெறும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நிரலாக்க குழு ஒன்று அமைக்க வேண்டும். வேண்டிய வளங்களைத் திரட்ட யாவர்க்கும் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழுக்கள் தெரிவிப்பது – வழுக்கள் களைவதற்கு நம்மில் ஒரு குழு வேண்டும்.

வரவேற்பு குழு ஒன்று அமைத்து புதிதாக வருவோருக்கு கனிவுடன் வழிகாட்ட வேண்டும்.

கல்லூரிகள் பள்ளிகள் பொது மன்றங்களில் உபுண்டு பற்றிய அறிமுக வகுப்புகளை நடத்தலாம். நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்த ஒரு குழு இருத்தல் நல்லது.

தொழில் ரீதியான உபுண்டு பயிற்சி மையங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி-பதில் வடிவில் எப்படிச் செய்வது வடிவில் தளமொன்றை கொண்டு வரலாம்.

மாவட்டம் தோறும்/ ஊர் தோறும் உபுண்டு தமிழ்க் குழும மன்றங்கள் அமைக்கலாம்.

உபுண்டு தமிழ்க் குழுமத்திலிருந்து அடுத்த ஆண்டிற்குள் ஐந்து உபுண்டு உறுப்பினர்களையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும்.

2 thoughts on “செயற்திட்டம்…

  1. Happy to hear, how do I help? An open source operating system in Tamil sounds like a distant dream, but together we can make it possible. Imagine a scenario where school kids in villages have a laptop (government is providing one these days) and it runs Ubuntu in Tamil. That is the kind of social change that our land has been expecting in decades. The IT penetration that such an eco-system can create is going to be indescribably good, and next revolution waiting to happen. Please let us know how we can help, not just as a translator, but as a hardcore programmer creating the next level of assets for Ubuntu tamil.

  2. கடந்த 3ஆண்டுகளாக விக்கித்திட்டங்களில், குறிப்பாக விக்சனரியில் பங்களிக்கிறேன்.அத்தகைய பங்களிப்புகளை, வின்டோசில் இருந்து செய்வது, எனக்கு கொள்கை இடிப்பாகத் தோன்றுகிறது. எனது அனைத்து செயல்களையும் உபுண்டு போன்ற கட்டற்ற மென்மியத்திலிருந்தே செயல்படுத்த ஆர்வம் கொண்டுள்ளேன். என்னையும் உங்களது பயிற்சிவகுப்பில் இணைத்துக் கொள்ள இதன்மூலம் கோருகிறேன். வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *