கோவையில் நடந்த தமிழ் இணைய மாநாடு

கோவையில் தமிழ் இணைய மாநாடு ஜூன் 24 தெடங்கி 27ஆம் தேதி வரை நடந்தது. நண்பர் இரவிசங்கர் உதவியால் தமிழ் விக்கிபீடியா குழுமத்துடன் இணைந்து அங்கு வந்த மக்களுக்கு உபுண்டு தமிழ் குழுமம் சார்பாக கட்டற்ற மென்பொருளின் பயன்களை பற்றி விளக்கபட்டது. கட்டற்ற மென்பொருளின் கேள்வி பதில்கள் அடங்கிய ஒரு நோட்டீஸ் மற்றும் உபுண்டு 10.04 வட்டுகளை ஆர்வமுள்ள மக்களுக்கு விநியோகிக்கபட்டது.

ராமதாஸ்,நாகராஜா, பத்து, கனகராஜ் , செங்கோட்டுவேல், விக்னேஷ், அருளப்பன், ராஜ் குமார், தமிழ் இனியன், அரவிந்தன், நவீன் ஆகியோர் உபுண்டுவின் பயன்களை மக்களுக்கு விளக்கினார்கள்.
இருபுறமாக அமைந்த ஸ்டால்ளில் ஒரு புறம் தமிழ் விக்கிபீடியா, தமிழ் 99 தட்டச்சு முறை பற்றியும் மறுபுறம் கட்டற்ற மென்பொருள் பற்றியும் விளக்கப்பட்டது. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , அமைச்சர் பூங்கோதை ஆகியோர் ஸ்டால்யை பார்வையிட்டனர்.

மாநாட்டில் எடுத்த சில புகைப்படங்கள் :
http://picasaweb.google.com/viky.nandha/SemmozhiMaanadu#