கோளரங்கம்


நான் தமிழில் எழுதுகின்றேன், நீங்கள் தமிழில் இதை படிக்கின்றீர்கள் என்றும் நம்புகின்றேன். ஆனால் என்னைபோல உங்களால் தமிழில் எழுத முடிகிறதா? இல்லை என்றால் பிழை இல்லை, ஆனால் எழுத என்றாவது முயற்சித்திருக்கின்றீர்களா? சில மாதங்களுக்கு முன்புவரை இது கொஞ்சம் கடிணமான காரியமாகத்தான் இருந்தது. ஆனால், hardy heronஇல் இம்முறையானது மிகவும் எளிதாக்கப்பட்டுவிட்டது. எப்படியென்று இதோ விளக்குகின்றேன்,

1. System > Administration > Language Supportஐ திறக்கவும்

2. இதில் எல்லா  மொழிகளும் வரிசையாக தொகுக்கப்பட்டுயிருக்கும். இதில் “Tamil”ஐ தேர்வு செய்யவும். தேர்வு செய்யப்பட்டுள்ள மொழிகளின் அருகிலுள்ள சதுரத்தில் ஒரு tick குரியை கானலாம்.

3. ஒரு புதிய மொழியை தேர்வு செய்யும்பொழுது அதற்கு தேவையான சில language packagesகள் நிருவ வேண்டியிருக்கும். Install ஆகாத மொழிகளை தேர்வு செய்ய்தால் Ubuntu தானாக அதை install செய்ய உங்களின் அனுமதியை நாடும். Internet connection இருக்குமாயில் அந்த packageகளை உங்களால் நிருவிக்கொள்ளலாம்.

4. இந்த packageகளை நிருவியபின்னர், System > Preferences > SCIM Input Method Setupஐ திறக்கவும். இதில் நாம் SCIMஐ உபயோகப்ப்டுத்தும் முறையை configure செய்ய இயலும். அடிப்படையாம் நாம் SCIMஐ trigger on மற்றும் off செய்யும் முறையை நாம் குறிப்பிட வேண்டும். பொதுவாக இதை CTRL+Space அல்லது CTRL+ALT+Space ஐ பயன்பத்துவது வழக்கம்.

5. கடைசியாக நாம் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான். Logout செய்து மீண்டும் login செய்யுங்கள்.

6. இப்பொழுது நீங்கள் முன்பு குறிப்பிட்ட trigger key combinationஐ  (அதாவது CTRL+Spaceஐ போன்று நீங்கள் தேர்வு செய்தது) செயல்படுத்திப்பாருங்கள். ஒரு குட்டி popup உங்கள் முன்னால் தெரியும். இதில் நீங்கள் உபயோகப்படுத்த விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றை மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் SCIMஐ செயல்படுத்தும் சமையத்தில் cursor மற்றும் focus ஆனது text input செய்யகூடிய text input field ஒன்றில் இருக்கவேண்டும். இல்லையென்றால் SCIM ஆனது இருந்தும் இல்லாத்து போன்றுதான் இருக்கும்.

இன்னும் ஒரு இலவச குறிப்பு: உங்களுக்கு தமிழ் typing தெரியவில்லை  என்றால் கவலைப்பட வேண்டாம். தமிழ் மொழிக்கு SCIMஇல் phonetic keyboard input உள்ளது. இதைக்கொண்டு ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை எழுத, அவை தமிழ் வார்தைகளாக தெரியும்.

மேல் கூரியவற்றை பின்பற்றுவதில் எதேனும் சந்தேகம் இருந்தால், யோசிக்காமல் இந்த blog postஇலேயே commentஆக எழுதவும். :)

ஒரு பெரிய நகர்படத்தில் இருந்து தேவையான அளவை மட்டும் வெட்டுவது எப்படி என்று உபுண்டு லினக்ஸின் 8.10 இல் எப்படி என்று பார்ப்போமா?

வெட்டவேண்டும் என்றவுடன் அங்கு இங்கு என்று தேடாமல்...

system ---Administration --- synaptic package manager ஐ சொடுக்கவும்,அது திறந்த பிறகு அதில் தேடுதல் பொட்டியில் split video என்று கொடுத்தால் முதலிலேயே இந்த Avidemux என்ற மென்பொருளை காண்பிக்கும் பிறகு என்ன அதை சொடுக்கி நிறுவிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த மென் பொருளை உபயோகிக்கும் போது எடுத்த சில படங்கள்.


உபுண்டு 8.04 க்கு மாறிய பிறகு தமிழ் எழுத்துக்கள் அதுவும் தமிழ்மணம் தெரிவதில் பிரச்சனை இருப்பதாக போன பதிவில் எழுதியிருந்தேன்.

சில நாட்கள் கழித்து சாரங்கன் இதற்கு மாற்று வழி இருப்பாதகவும் அதைப் பற்றி எழுதியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னபடி செய்து பார்த்தால் ஜிஎடிட்டில் நன்றாக தெரியும் எழுத்து தமிழ்மணத்தில் கொஞ்சம் கலங்கலாகத் தான் தெரிகிறது.

கீழே உள்ள படத்தில் பார்க்கவும்...

சாரங்கன் வேறு வழி எதுவும் இருக்கா?

நன்றி.

ஊருக்கு போய் வந்த பிறகு உபுண்டுவை திறந்த போது மென்பொருள் மேம்படுத்தல் ஞாபகமூட்டலில் உபுண்டு புதிய பதிவு இருப்பதாகவும், மேம்படுத்தலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தது.

ஏற்கனவே சூடுபட்டுக்கொண்ட நிகழ்வை இங்கு சொல்லியிருந்தேன்,இருந்தாலும் Software Updater மூலமே செய்துபார்க்கலாம் என்று அனுமதியளித்தேன்.பாதி வரை போய் அதன் பிறகு இணைய இணைப்பில் நேர்ந்த கோளாறினால் அப்படியே நின்று போயிருந்தது. தலை வலி ஆரம்பம் ஆனது.

இணைய இணைப்பு விட்டுப்போனது,எங்கு பிரச்சனை என்று ஆராய மனதில்லை. உடனே வின்டோஸுக்கு மாறி உபுண்டு 8.04 பதிவை தரவிரக்கினேன். சுமார் 45 நிமிடங்களுக்குள் 698 MB முடிந்தது. அதன் பிறகு வட்டில் எழுதி, நிறுவளை ஆரம்பித்தேன். என்னுடைய Boot Loader வரும்போது மட்டும் ஜாக்கிரதையாக இருந்து தேவைப்பட்ட இடத்தில்போட்டேன். இந்த முறை நிறுவும் போதே கம்பியில்லா இணைய இணைப்பை அதுவே தெரிந்துகொண்டது மிகவும் ஆறுதலாக இருந்தது. போன முறையில் இதற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது.

எல்லாம் ஒரு வழியாக முடிந்து திரை கீழே உள்ள மாதிரி திறந்தது.

திரையே அட்டகாசமாக இல்லை!!

முதலில் தமிழை தெரிய வைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்தேன், ஆதாவது மொழிக்காக உள்ள இடத்துக்குப் போய் தமிழை தேர்ந்தெடுத்து தேவையானவற்றை நிறுவிக்கொண்டேன்,

அதன் பிறகு இணையத்துக்குப் போய் தமிமணத்துக்குள் போனால் இப்படித்தான் தெரிகிறது.எழுத்துக்கள் சிரியதாக.

முகப்பு பக்கம் மட்டுமே இந்த பிரச்சனை,தொடுப்புகளை சொடுக்கினாள் எவ்வித பிரச்சனையில்லாமல் எழுத்து நன்றாகவே தெரிகிறது.

மீதமுள்ள மென்பொருட்களை ஒவ்வொன்றாக சோதித்துக்கொண்டு வரும் நேரத்தில் நம்ம மயூரேசன் எழுதிய totem movie player யில் யூடியூப் படங்களை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அங்கு போய் அதில் சொல்லியிருந்தபடி நிறுவியவுடன் ஏற்படும் மாற்றங்களை கீழே பாருங்கள்.

கமலின் பேட்டி..

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை....

தமிழியிலேயே தேடமுடியும் அதோடு வீடியோ தரமும் அருமையாக இருக்கு.

இணைய இணைப்புக்கு மாத்திரம் ஒவ்வொரு தடவையும் கடவுச்சொல் அடிக்கவேண்டியிருப்பது போன்ற சில நச்சு வேலைகள் இருப்பதை தவிர பெரிய தொந்தரவு கண்ணில் படவில்லை.

ஏதாவது ஒரு விண்டோவை மூடும் போது 3D முறையில் அழகாக மூடுகிறது.

முடிந்தால் முயற்சித்து பாருங்கள்.

உபுண்டுவின் புதிய பதிப்பான 8.04 தற்போது வெளிவந்துவிட்டது.

அவசியமான சிறப்பான பல மேம்பாடுகளுடன் இப்புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்ப்பயனர்களான எம்மை இப்பதிப்பு ஏமாற்றிவிட்டது. தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துருவை மாற்றினாலும் தெளிவாகத்தெரியாத புது பிரச்சினை ஒன்று இப்பதிப்பில் இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறோம்.

காரணம் கண்டறியப்பட்டு தீர்வு கண்டடையப்பட்டதும் தமிழப்பயன்பாட்டுக்கு ஏற்றவண்ணம் இப்புதிய பதிப்பினை உங்களுக்காக மாற்றியமைத்துத்தரும் வகையில் புதிய தபுண்டு வெளியாகும்.

அதுவரை தபுண்டு வெளியீடும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ், இணையப்பயன்பாட்டை முக்கியமாகக்கருதும் தமிழ்ப்பயனர்கள் இப்போதைக்கு உங்கள் உபுண்டு இயங்குதளத்தை 8.04 இற்கு இற்றைப்படுத்த வேண்டாம் எனப்பரிந்துரைக்கிறேன்.

7.10 இப்போதைக்கு மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறது.


இப்பரிந்துரை உபுண்டு குடும்பத்தின் ஏனைய வழங்கல்களான குபுண்டு, எடியுபுண்டு, எக்ஸ் உபுண்டு ஆகியவற்றுக்கும் பொருந்தி வருவதே.

இப்பிரச்சினை தொடர்பான தகவல்களும் மேலதிக செய்திகளும் பின்னூட்டம் வழியாக தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும்.

என்னுடைய பதிவுகளை தமிழ்மண திரட்டியில் இருந்து விலக்கச்சொன்ன பிறகு வேறு எங்கேத் தெரியப்போவுது என்று இருந்தேன்.

இன்று காலை பொழுது போகாம “ThatsTamil" பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது வலைப்பக்கத்தில் உபுண்டு- பென் டிரைவில் என்று தெரிந்தது,என்னடா நான் போட்ட தலைப்பா இருக்கே என்று பார்த்தால் அது என் சுட்டிக்குத்தான் போகிறது.அட! இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என்றிருந்தது.

இந்த மாதிரி எங்கெங்கு போகிறதே? யாராவது பயணடைந்தால் சரி.


கூகிள் தனது app engine ஐ அறிவித்திருக்கிறது. கணினி வலையமைப்புக்களின் போக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது. வலைப்பக்கங்கள் செயலிகளாக மாறிக்கொண்டிருக்க்கின்றன. ஆனால் அதே நேரத்தில் உங்கள் கணினிச்செயலிகள் வலையோடு தம்மை இறுகப்பிணைத்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டன.

இந்த அடிப்படையில் அண்மையில் வெளிவந்த க்னோம் 2.22 மேசைச்சூழலின் புதிய முன்னேற்றங்களில் ஒன்றுதான் இந்தச் சொருகுபொருள் (plugin).

உபுண்டு, ஃபெடோரா போன்ற வழங்கல்களில் இயல்பிருப்பாக வந்து தொலைக்கிறது என்பதைத்தாண்டி இந்த டோட்டம் இயக்கியை நான் பாட்டுக்கேட்கவோ படம் பார்க்கவோ பயன்படுத்துவதில்லை.

ஆனால் இந்த youtube சொருகுபொருளோடு தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது totem.


உங்கள் totem player இனை திறந்து வைத்துக்கொண்டு அதில் youtube நிகழ்படங்களைத்தேடி, அதிலேயே பார்க்கக்கூடிய வசதியை இது தருகிறது. கூடவே related videos, search results எல்லாவற்றையும் சிறு படங்களாகப் பக்கப்பட்டையில் காண்பிக்கிறது.

உலாவியைப்பயன்படுத்தி youtube தளத்திற்குப்போய் படம்பார்ப்பதை விட இந்த வழிமுறை கொஞ்சம் ஆர்வமூட்டும்படியாக இருப்பதென்னவோ உண்மைதான்.
கூடவே வலைச்செயலிகளை விட, ஒரு மேசைத்தள media player என்ற வகையில் பெறக்கூடிய கூடுதல் வசதிகளையும் பெற முடிகிறது.


இயல்பிருப்பாக வரும் சொருகுபொருளில் வழுக்கள் உண்டு. வழு நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தச்சொருகினை பெற்றுச் சொருகிக்கொள்ளுங்கள்.

இம்மென்பொருள் கட்டற்றது. பைத்தான் மொழியில் எழுதப்பட்டது.

இதனை மேலும் சீர்படுத்தச் சில யோசனைகள்:

1. youtube மட்டுமல்லாது ஏனைய நிகழ்படப்பகிர்வுச் சேவைகளையும் உள்ளடக்கலாம்.

2. youtube இனது சொல்திருத்தியைப் பயன்படுத்ததக்கதாக்கலாம்.

3. தமிழில் "தமிழ்" என்று தேடினால் "tamil", "thamiz" போன்ற தேடல் முடிவுகளையும் தரக்கூடியவண்ணம் மாற்றியமைக்கலாம்.

4. தரவிறக்க வசதியினைச் சேர்க்கலாம்.

5. நேரடியாக எமது நிகழ்படங்களைத் தரவேற்றும் வசதி இருந்தால் சிறப்பு.

6. பின்னூட்டங்களைப்படிக்க, அனுப்பக்கூடிய வசதி.

இந்த வசதிகளை வழங்க பகிர்வுத்தளங்களின் API ஒத்துழைக்கவேண்டும்.

முயன்றுபாருங்கள்.

புதிய க்னோம் தற்போது புதிதாக வந்த வழங்கல்களில் காணப்படுகிறது. அடுத்து வரும் உபுண்டுவும் இதனையே கொண்டிருக்கிறது.

முதல் "மாதப்போக்கினை"(menstruation) விரைவில் எதிர்கொள்ளவுள்ள, எதிர்கொண்டுவிட்ட பெண்களுக்கு உதவக்கூடிய மென்பொருள்(Software) இது. அதிலும் குறிப்பாக அவர்கள் ஆண் பாலுறவுத் துணைவர்களைப்(sex partners) பெற்றிருக்கும் நிலையில் இம்மென்பொருள் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

மாதந்தோறும் மாதப்போக்கு ஆரம்பிக்கும் நாட்கள், கருத்தடை மருந்துகளை உபயோகிக்கும் நாட்கள் போன்ற உள்ளீடுகளைக்கொண்டு இம்மென்பொருள் எதிர்வுகூரல்களைச் செய்கிறது.

இம்மென்பொருளின் பெயர்

கருவுற விரும்புபவர்கள் சேர்க்கை(intercourse) கொள்ளக்கூடிய நாட்களையும், கருவுறாமல் தவிர்க்கக்கூடிய நாட்களையும் பருமட்டாகக் கணக்கிட்டு அறிவிப்பதுடன், குழந்தை பெற விரும்பும் பட்சத்தில் குழந்தையின் பிறக்கும் திகதியை தீர்மானிக்கக்கூடிய, அதற்கான சேர்க்கை நாளைக் கணக்கிடக்கூடிய வசதிகளையும் இது தருகிறது.

கருவுறும் (அல்லது கருவுறா) நாட்களைக் கணக்கிடுவதற்கு பல முறைவழிகள் உண்டு. அதில் நாட்காட்டி முறை (Calendar-based method) பிரபலமானது.

(நாட்காட்டி முறை தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள்)

கருவுற விரும்புபவர்கள் சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இது மிகவும் பயன்படும்.

கருவுற விரும்பாதவர்களுக்கு ஏனைய கருத்தடை முறைகளோடு ஒப்பிடும்போது நாட்காட்டி முறை அவ்வளவு நம்பத்தகுந்ததல்ல. ஆனாலும் மிக அடிப்படையான ஒரு முறை என்ற அளவில் பரவலாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (மற்றைய கருத்தடை வழிகள் எல்லோருக்கும் தடையின்றிப் பெறத்தக்கதாக எல்லா நேரத்திலும் இருந்துவிடுவதில்லை)

இம்மென்பொருளின் கணிப்பீடுகள் மிகவும் பருமட்டானவை. இதனை நூறுவீதம் நம்ப வேண்டாம். 'அங்கீகரிகப்பட்ட' உறவில் சேர்ந்து வாழ்பவர்கள் கருவுற விரும்பாவிடில் இம்மென்பொருளின் எதிர்வுகூரல் தவறும் பட்சத்திலும் கூட மாற்று வழிகளை இலகுவில் பெற முடியும். ஏனையவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.

இதனைப்பயன்படுத்தும் வழிமுறைகள் மிக எளிமையானவை.

ஒவ்வொரு மாதத்திலும் மாதப்போக்கு ஆரம்பிக்கும் நாளை இதிலுள்ள நாட்காட்டியில் சொடுக்கிக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஆகக்குறைந்தது ஆறு மாத காலத்துக்கு குறித்து வைக்க வேண்டும். கருத்தடை மருந்து பயன்படுத்துபவர்கள் அந்தத் தகவலையும் குறித்து வைக்கக்கூடிய வசதிகள் உண்டு.

இவ்வாறு குறித்து வைத்ததும் கருவுறக்கூடிய நாட்கள் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும். கருவுறா நாட்கள் மெல்லிய brown நிறத்தில் காண்பிக்கப்படும்.

ஏனைய எதிர்வுகூரல்கள் கணிப்பீடுகளைப் பெறும் வழிமுறைகள் மென்பொருளின் உதவிக்குறிப்புக்களில் விளக்கப்பட்டுள்ளது.

பலர் பயன்படுத்தும் கணினிகளில் உங்கள் சொந்தத் தரவுகளைக் கடவுச்சொல் கொடுத்து பூட்டி வைத்துக்கொள்ள முடியும்.

மென்பொருள் பைத்தன் மொழியில் wxpython பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
முற்றிலும் கட்டற்ற மென்பொருள்
க்னூ/லினக்சில் பிரச்சினைகள் எதுவுமின்றி இயங்கும்.

மென்பொருளைப்பெற்றுக்கொள்ள இங்கே செல்லுங்கள்.

டெபியன்/உபுண்டு இயங்குதளங்களில்
apt-get install cycle ன்ற ஆணையை வழங்கி நிறுவிக்கொள்ளலாம்.

கருவுறுதல், மாதப்போக்கு தொடர்பான மருத்துவ அறிவுள்ளவர்கள் இங்கே சொல்லப்பட்ட தகவல்களில் தவறெதுவும் இருந்தால், இம்மென்பொருள், நாட்காட்டி முறை ஆகியவற்றைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் இங்கே பின்னூட்டமிட்டு உரையாட முன்வாருங்கள்.

லினக்ஸில் பல வருடங்களாக இருந்த முக்கியமான தடை நேற்று எனக்கு தீர்ந்தது ஆதாவது வீடியோ/ஆடியோ Chat.

கீழே இருக்கும் படத்தை பார்த்து பயந்திடாதீங்க.. எதுக்கு 2 கேமிரா? ஒன்று வின்டோசுக்கு மற்றொன்று லினக்ஸுக்கு.இட பக்க கேமிரா வின்டோஸில் நல்ல ஒளி தரத்துடன் வீடியோ சேட் செய்ய முடியும் அதனால் அதைவிட மனதில்லை ஆனால் லினக்ஸில் வேலை செய்யவில்லை.Logitech கேமிராக்கள் பல லினக்ஸில் நன்றாக வேலை செய்கிறது.

பல வருடங்களாக மென்பொருட்கள் இருந்தாலும் ஒன்று ஆடியோ இருக்கும், வீடியோ இருக்காது.இப்படியே போய் கொண்டிருந்த வாழ்வில் ஏதோ ஒரு ஃரம்மில் லினக்ஸுக்கான மென்பொருளை ஸ்கைபி (Skype) பீட்டா வெர்ஷனாக வெளியிட்டு இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.அங்கு போய் அதை நிறுவியவுடன் முயன்று பார்த்தேன்,என்னுடைய வெப் கேம்மில் உள்ள மைக் வேலை செய்தது ஆனால் வீடியோவை பார்க்கமுடியவில்லை.

காரணத்தை கண்டுபிடிக்க சில மணி நேரம் பிடித்தது. ஸ்கைபி யை உபயோகிக்கும் முன்பு இதே மாதிரி ஒரு மென்பொருளான Ekiga வை உபயோகித்ததால் கேமிரா அதனுடன் இருந்துவிட்டது.அதை நீக்கியவுடன் கீழே உள்ள மாதிரி தெரிந்தது.

சுமார் 6 வருடங்களாக லினக்ஸில் விளையாடிய பிறகு நேற்று தான் வீடியோ/ஆடியோ சேட்டிங் கை வந்தது.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதன் தொடர்பில் எழுதிய முந்தைய பதிவு இங்கே.

XML feed